Thursday, November 12, 2009

முதுமைப்பருவம்


தாய் தன்கருவறையில்

ஈரு ஐந்து மாதங்கள்

சுமந்து பெற்றெடுக்கிறாள்

பிள்ளைச்செல்வம் -அது

அவளுக்கு சுமையில்ல

பிஞ்சு முகத்தைப்பார்ப்போம்

என்ற சுகம்தான் !

பிள்ளையின் குழந்தைப்பருவம்

அவள் கைப்பிடித்து

நடைபழகும்

முகம் பார்த்து

மொழி பழகும்!

பிள்ளையின் இளமைப்பருவம்

ஈரு ஒன்பது வருடங்கள்

குழந்தையின் வளரும்பருவம்

பார்த்து மகிழ்கிறாள்! - ஆனால்

தாய்க்கு தன்மகன்

கைப்பிடித்து நடைபழகும்

பருவம்தான் முதுமைப்பருவம்

அப்போதுதான்-

மகனோ தாய்க்கு

ஒர் இல்லம்

தேடுகிறான் - அதுதான்

முதியோர்இல்லம்!! - அப்போதும்

குழந்தைப் பருவமாகத்தான்

தன்மகனின் முகம்பார்த்து

புன்னகை பூக்கிறாள் - தாய் !!!!



அன்புடன், S.SVSugarsen