Sunday, August 7, 2016

Thursday, November 12, 2009

முதுமைப்பருவம்


தாய் தன்கருவறையில்

ஈரு ஐந்து மாதங்கள்

சுமந்து பெற்றெடுக்கிறாள்

பிள்ளைச்செல்வம் -அது

அவளுக்கு சுமையில்ல

பிஞ்சு முகத்தைப்பார்ப்போம்

என்ற சுகம்தான் !

பிள்ளையின் குழந்தைப்பருவம்

அவள் கைப்பிடித்து

நடைபழகும்

முகம் பார்த்து

மொழி பழகும்!

பிள்ளையின் இளமைப்பருவம்

ஈரு ஒன்பது வருடங்கள்

குழந்தையின் வளரும்பருவம்

பார்த்து மகிழ்கிறாள்! - ஆனால்

தாய்க்கு தன்மகன்

கைப்பிடித்து நடைபழகும்

பருவம்தான் முதுமைப்பருவம்

அப்போதுதான்-

மகனோ தாய்க்கு

ஒர் இல்லம்

தேடுகிறான் - அதுதான்

முதியோர்இல்லம்!! - அப்போதும்

குழந்தைப் பருவமாகத்தான்

தன்மகனின் முகம்பார்த்து

புன்னகை பூக்கிறாள் - தாய் !!!!



அன்புடன், S.SVSugarsen


Wednesday, July 1, 2009

தமிழி்ல் அறிவோம் தமிழ்

பல்பு(அதாங்க மஞ்சள் நிறத்தில எரியுமே..வீட்டில.. )அதனுடைய தமிழ்ச்சொல் என்ன?

இனிமையான தமிழ்பெயர் : மின்குமிழ்

Thursday, June 18, 2009

வருது..வருது..வருது..தத்துவம்:

தேனீயைப்போல் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும்.. மாட்டைப்போல் கடினஉழைப்போடு உழைக்கவேண்டும்.. யானையின் தும்பிக்கைப்போல் நம்பி்க்கைவேண்டும்.. இம்மூன்றுடன் தன்மீது தன்னம்பிக்கைவைத்து முயற்சிசெய்.. சத்தியமாக வெற்றி நிச்சயம்.


அன்புடன், S.SVSugarsen